வியாபாரிகளுக்கு ஒரு விண்ணப்பம்

                  வியாபாரிகளுக்கு   ஒரு   விண்ணப்பம்


      மரணங்கள்    மலிந்த   தேசத்தில்    நாமிங்கு....

      மிரண்டுபோய் கிடக்கின்றோம் கொரோனாவின் கோரப்பிடிக்குள்

      பொதுமுடக்கத்தின்  நீ...டிப்பால்... ....அனைவரின்  பொருளாதாரமும்

     பொசுங்கிக்  கிடக்கும்   பொல்லாத  கொவிட்  காலமிது


      மரமேறி  விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல

      அரிசி, பருப்பு , சீனியெலாம்  முதலில்  யானைவிலை

      அங்கர்,ரத்தி பால்மா  இன்னும்சில   இன்னும்  .....தலைமறைவு

     நியாயவிலையில்  வாங்கிடவோ   நீ...ண்ட ...வரிசை

     கால்கடுக்க  பலமணிநேரம்  நின்றாலும்  அதுகூட

     ஒருகிலோ சீனிதான்  சிலவேளை ???   அதுவும் இல்லை

    

     பதுக்கி வைத்து விற்றுப் பணமீட்ட 

     இதுதான்  சந்தர்ப்பமா சிந்தியுங்கள்  வியாபாரிகளே ! 

     வரும்போது   நாமெதுவும்   கொண்டுவரவில்லை

     போகும்போதும்  எதுவும்  கூடவரப்போவதில்லை


     இறுதியில்....இறுதியின்   இறுதியாய் ...  ....

     யார் யார்  முகத்தை   யார்யார்   பார்ப்பாரோ !

     இல்லை  பார்ப்போமோ !  இல்லை  அதுவும் இல்லையோ !!!

     யாரறிவார்   இயற்கையின் நியதியை  யாரும் அறிகிலார்


     இதற்கிடையில்   பதுக்கி  இவைத்து  விற்காமல்

      நியாயமாய்  நடந்து  மானுடத்தை  காத்திடுங்கள்

     சிந்தியுங்கள்...   வியாபாரிகளே !  சிந்தியுங்கள்...

     ஒருகணமேனும்  ....  சிந்தியுங்கள்   வியாபாரிகளே !!   சிந்தியுங்கள் .... ....    

     

   


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலைப்பக்கத்தில்... என் தமிழின் வசந்த உதயம்